திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் , முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 7 August 2024

திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் , முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி


திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ,  முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி - நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகளுக்கும்,  ஏழை , எளிய மாணவச் செல்வங்களுக்கும் நிதி உதவி.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் , மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி - யின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி .கல்லுப்பட்டி பேருந்து நிலையம் முதல் யூனியன் அலுவலகம் வரை திமுக நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 200 - க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி நடத்தினர்.
       
 
இதனை தொடர்ந்து , முன்னாள் முதல்வர் கலைஞருடைய பிரம்மாண்ட திரு உருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளும், ஏழை, எளிய மாணவர்களுக்கு நிதி உதவியும் , கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு நிதி உதவியும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் முத்துகணேஷ், துணைத் தலைவர் பாண்டி முருகன், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், மற்றும் ஒன்றியகழக நிர்வாகிகள், பேரூர்கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad