மது அருந்தி உறங்கியவர் உயிரிழப்பு!
மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள சுதந்திர நகர் 3 வது தெருவில், சீதாலெட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் *முத்துக்கருப்பன்* (வயது 37) என்பவர், இன்று (ஜூலை.3) மது அருந்தி சாலையிலேயே உறங்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வெகு மணி நேரம் கழித்தும் எழுந்து விடாத நிலையில், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து, அங்கு வந்த செவிலியர் ஒருவர் முத்துக்கருப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து யா.ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment