திருமங்கலம் அம்பாள் அவதரித்த நாளான ஆடிப்பூரத்தையொட்டி 40,000 வளையல் கொண்ட அலங்காரத்தில் ஜொலித்த அம்மன் - ஏராளமான பெண்கள் தரிசனம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ரகுபதி கொண்டம்மாள், ஸ்ரீ கிருஷ்ண கொண்டம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக் கோயிலில், அம்பாள் அவதரித்த நாளான ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டுதோறும் சாமி மற்றும் அம்மனுக்கு பல்லாயிரக்கணக்கான வளையல் அலங்காரத்தில் ஜொலிக்கச் செய்து அம்மனுடைய அருளை பெற பக்தர்கள் ஒன்று கூடுவர்.
அதுபோல் இந்த ஆண்டு 40,000 வளையல்களைக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண கொண்டம்மாள், ஸ்ரீ ரகுபதி கொண்டம்மாளசுவாமிகளுக்கு அலங்காரம் செய்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பல்வேறு வண்ண வண்ண வளையல்களை கொண்டு அலங்கரித்த காட்சி பக்தர்கள் அனைவரின் கண்களுக்கு விருந்தாக இருந்தது.
இதில் திருமங்கலம், கல்லுப்பட்டி , பேரையூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து 500 பெண் பக்தர்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினர்..
திருக்கோயிலில் குழந்தை வரம் வேண்டியும் ,நினைத்த காரியம் வெற்றி அடைய வேண்டியும் அம்மன் அருள் பெற பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம் செய்தியாளர்
R.வினோத் பாபு
No comments:
Post a Comment