திருமங்கலத்தில் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் தே.மு.தி.க. கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.அதில் ஒரு பகுதியாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாவட்ட செயலாளர் கணபதி முன்னிலையில் 27வதுவார்டு நகர்மன்ற கவுன்சிலர் ராஜகுரு தலைமையில் பொதுமக்கள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பிரியாணியை வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் நகர்மன்ற செயலாளர் ஜெ.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர் கழக நிர்வாகிகள், மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வார்டு கவுன்சிலர் ராஜகுரு செய்திருந்தார்.
No comments:
Post a Comment