லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து நடத்தும் சிலம்பாட்ட போட்டி திருமங்கலத்தில் நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து நடத்தும் சிலம்பாட்ட போட்டி காராத்தே மாஸ்டர் பால்பாண்டி தலைமையில் திருமங்கலத்தில் பி.கே. என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த சிலம்பாட்ட போட்டியில் சென்னை, கோவில்பட்டி, ராஜபாளையம், திருப்பூர் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் இந்த சிலம்பாட்ட போட்டியில் ஒற்றை சுற்றும் முறை, இரட்டை சுற்றும் முறை, மற்றும் சுருள் வாழ் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் பெருந்திறலாக மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் மெடல்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் அருள் கலந்து கொண்டார். வரவேற்புரையாற்றினர் அவனமுத்து செந்தில் என்ற போஜராஜன், சிறப்புரை P.V.PV.P.சிவக்குமார், பார்த்திபன்நாடார், நவநீதகிருஷ்ணன், ஜெயசாந்தினி, விக்னேஷ்வரன் நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பால்பாண்டி செய்திருந்தார்.
No comments:
Post a Comment