கிராமப்புற மக்கள் பயன் பெற , முதன்முதலாக தொடங்கிய புத்தகத் திருவிழா - புத்தகம் படிக்கும் பழக்கத்தை கிராம மக்களுக்கு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் பேருந்து நிலையம் அருகே பாரதி புத்தகாலயம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இணைந்து, கிராமப்புற மக்கள் பயன் பெறும் வகையில் முதன்முதலாக புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டது .
இந்த புத்தக திருவிழாவில், கலை, அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன . கிராம மக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று தங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், புத்தகங்களை வாங்கிச் சென்றனர். முதன் முதலாக கிராமப்புறத்தில் தொடங்கப்பட்ட இந்த புத்தகத் திருவிழா, தொடர்ந்து பல்வேறு கிராம உட்புறங்களில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment