மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு; விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட புகையால் வாகன ஓட்டிகள் அவதி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 4 August 2024

மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு; விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட புகையால் வாகன ஓட்டிகள் அவதி


மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு; விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட புகையால் வாகன ஓட்டிகள் அவதி


மதுரை அவனியாபுரம் பகுதியை அடுத்துள்ள வெள்ளைக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. சமீபத்தில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு எரிந்த நிலையில் போராடி தீயணைப்பு துறையினர் அனைத்தனர்.


இந்த நிலையில் வெள்ளை கல் குப்பை கிடங்குக்கு அருகே உள்ள விவசாய நிலத்திலிருந்து திடீரென வானளவிற்கு புகை வருவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகையானது அருகில் உள்ள விமான நிலையம் செல்லும் சாலை வரை செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். விவசாய நிலத்தில் பூச்சி வராமல் இருப்பதற்காக விவசாயிகள் நெருப்பு மூட்டினார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என தெரியாததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad