கொல்கத்தாவில் பாலியல் வன்மத்தால் இறந்த பெண் மருத்துவருக்கு மெளன அஞ்சலிக்கு பின் "பாரதரத்தரை ராஜீவ் காந்தி விருது " - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 21 August 2024

கொல்கத்தாவில் பாலியல் வன்மத்தால் இறந்த பெண் மருத்துவருக்கு மெளன அஞ்சலிக்கு பின் "பாரதரத்தரை ராஜீவ் காந்தி விருது "


கொல்கத்தாவில் பாலியல் வன்மத்தால் இறந்த  பெண் மருத்துவருக்கு மெளன அஞ்சலிக்கு பின் "பாரதரத்தரை ராஜீவ் காந்தி விருதுகளை மாணவமாணவிகளுக்கு மாணிக்கம் தாகூர் விருதுகள் வழங்கினார்



மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாரத ரத்னா ராஜீவ் காந்தி விருது சான்றிதழ்களை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வழங்கினார்.
127  பள்ளிகளை சேர்ந்த 768 மாணவ மாணவிகள் மாணிக்கம் தாகர் MP யிடமிருந்து "ராஜிவ் காந்தி விருது " சான்றிதழ் பெற்றனர்.


+1,மாற்றுதிறனாளி மாணவி யோகவர்ஷினிக்கு மேடையிலிருந்து கீழே வந்து வழங்கி வாழ்த்து கூறினார்.


2023 - 24 கல்வியாண்டில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 10, 11, 12ம் வகுப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளியளவில் முதல்,மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவிகளுக்கு பாரட்டு சான்றிழ் "பாரத ரத்னா ராஜிவ் காந்தி "விருதுகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணக்கம் தாகூர் வழங்கினார்.


விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணிக்கம் தாகூர்
MP கூறியதாவது.. தலைவர் ராஜிவ் காந்தி ஏர் இந்தியாவில் பைலட்டாக பணிபுரிந்தார். பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் வற்புறுத்தலின் பேரிலே 1980ல் அரசியலுக்கு வந்தார் இந்திரா மறைவிற்கு பின் 1984ல் பிரதமராக பதவியேற்று நாலே முக்கால் வருடம் பதவி வில் இருந்தார்.


1984ல் இந்தியாவை தொலைநோக்கு சிந்தனையுடன் நவீன இந்தியாவை உருவாக்கினார். இந்தியாவிற்கு முதலில் கணினி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்


5 வருட காலத்திற்குள் இந்தியாவை 20 நூற்றாண்டில் சிறந்த நாடாக மாற்ற முனைந்தார்.


அவரின் பிறந்த நாளில் மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தோடு "ராஜீவ் காந்தி "போல் பெரிய இலக்கை அடைய வேண்டும்.


எனும் நோக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு இந்த பாராட்டு சான்றிதழ் வழங்குகிறோம்.


உங்களிடம் வழங்கப்பட்ட சிறிய காகிதத்தில் உங்களின் பெயர், கல்வியுடன் உங்கள் லட்சியம் என்ன என கேட்கப்பட்டுள்ளது.


இது எதற்காக என்றால் உங்கள் எண்ணங்கள் தான்
உங்கள் இலக்கை அடைய வைக்கும்.


நான் 86 ல் பள்ளியில் படித்த போது எனது ஆசிரியை சீதாலெஷ்மி, எனது லட்சியம் MP. ஆவது என கூறினேன் பல மாணவர்கள் என்னை சிரித்தனர்.
என் ஆசிரியை மட்டும் என்னை உற்சாக படுத்தினார்.


2006ல் நான் நாடாளு மன்ற உறுப்பினரானேன்.
அன்றைக்கு என்னை உற்சாக படுத்திய ஆசிரியை 4 வருடங்கள் கழித்து மும்பையில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். உங்களுக்கு தேவை கல்வி மற்றவை உங்கள் பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள்.


கொல்கத்தாவில் 36 மணி நேரம் பணிபுரித்த மருத்தவரை நோயாளி ஒருவர் பாலியல் வன்மம் செய்து கொலை செய்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.
மாணவிகளே, மாணவர்களே நீங்கள் பழகுங்கள் ஆனால் வன்மம் எண்ணம் வேண்டாம்.


இருபாலருக்கும் பழக்கம் தேவை தான் உங்களுக்குரிய திருமண வயது 21 ஆகையால் அதுவரை கவனமுடன் படியுங்கள். உங்களின் உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த செயல்களாய் லட்சியமாக வேண்டும். கொல்கத்தா மருத்தவருக்கு 1 நிமிடம் நாம் மொளன அஞ்சலி செலுத்துவோம் என மாணவர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறினார்.


பின்னர் 127 பள்ளிகளை சேர்ந்த 769 மாணவ, மாணவிகளுக்கு பாரத ரத்னா ராஜீவ் காந்தி விருது சான்றிதழ் வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad