திருமங்கலம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் , கோவிலை அகற்றும் போது கிராம மக்கள் சன்னதிக்குள் புகுந்து பெண்கள் அமர்ந்து கூச்சல் - இளைஞர்கள் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் பொக்லைன் இயந்திர மூலமாக இடித்து அகற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மருதூர் அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது . இத்திருக்கோயில் அரசு புறம்போக்கு நிலத்தில் நீர் பிடிப்பு பகுதியில் இருப்பதாக கிராமத்தைச் சார்ந்த சிலர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்ததன் பேரில், நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் கோவிலை அகற்ற முற்படும்போது, கிராம மக்களில் சிலர் கோவில் மேல் ஏறி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கோயில் சன்னதிக்குள் நுழைந்து பெண்கள் ஏராளமானோர் உள்ளே தாழிட்டு அமர்ந்து கொண்டு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர் .
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதில் சில பெண்கள் சாமியாடி கொண்டு கோவில் முன்பு ஆக்ரோஷமாக ஆடுவதைக் கண்டு வருவாய் துறையினர், காவல்துறையினர் என்ன செய்வதென்று தெரியாமல், திகைத்துப் போய் நின்றனர்.
3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பொக்லைன் இயந்திரம் மூலம் கோவிலை அகற்ற முற்படும்போது, சிலர் இயந்திரத்தின் முன்பு அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோயில் மேல் ஏறி சிலர் இளைஞர்கள் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி ஈடுபட்ட போது, அவர்களையும் போலீசார் அப்புற படுத்தி அங்கிருந்து விரட்டி அடித்தனர். கோவில் சன்னதியில்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் பூட்டை உடைத்து போலீசார் அவர்களையும் குண்டு கட்டாக வெளியேற்றி அப்புறப்படுத்திய பிறகு , பொக்லைன் இயந்திரம் மூலம் கோவில் முழுவதுமாக அகற்றப்பட்டது. இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment