மதுரை அரசு மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 6 வயது சிறுமிக்கு ஆதரவு கரம் நீட்டிய தொண்டு நிறுவனத்துக்கு குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாவட்டம் நிலையூர் அடுத்த கைத்தறி நகரை சேர்ந்த சரவணன் லட்சுமி தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சரவணன் சென்னையில் உணவு டெலிவரி பாய் மற்றும் ரேபிடோ ஒட்டி அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது ஆறு வயது மகள் லட்சிதா ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு தற்போது நுரையீரல் வரை பரவியுள்ளதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் 6 முதல் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்பதால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியின் சிகிச்சைக்கு உதவி கேட்டு சமூக வலைதளங்களின் வாயிலாக கேட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு முயற்சியால் சிறுமியின் சிகிச்சைக்கு முதல்கட்டமாக 25000 ரூபாய் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தர்மராஜ் நிலைய மருத்துவ அதிகாரி சரவணன், குழந்தைகள் பிரிவு மருத்துவ இயக்குனர் நந்தினி உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் லட்சுமி கூறும்போது தனது மகள் ரத்த புற்று நோய் என்னும் கொடிய நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்காக நாங்களும் போராடி வருகிறோம்
எனது கணவருக்கு குறைந்த வருமானம் ஏழ்மையான குடும்பத்தில் இருக்கிற நிலையில் சிறுமியின் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில்ஆறு லட்சம் முதல் 8 லட்ச ரூபாய் செலவாகும் என கூறினர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக என் குழந்தைக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இங்கு ஸ்கேன் மருந்து மாத்திரைகள் இலவசமாக கிடைத்தாலும் மற்ற செலவுகளுக்கு நாங்கள் தடுமாறி வந்தோம். இந்த செய்தியை கேள்விப்பட்ட மதுரையின் அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு முயற்சியால் முதல் கட்டமாக 25000 ரூபாய் கொடுத்துள்ளார். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மதுரையின் அய்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் இத்தகைய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment