78வது சுதந்திர தினத்தை ஒட்டி, திருமங்கலம் பள்ளி மாணவன் வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 8560 - ஐ திருமங்கலம் வட்டாட்சியரிடம் வழங்கினார் - திருமங்கலம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை .
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தாசில்தார் மனேஷ் குமாரிடம், திருமங்கலம் பி கே என் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவன் ஹரிஷ் ஸ்ரீதரன் , தான் சேகரித்து வைத்திருந்த ரூபாய் 8560 - ஐ. வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக வழங்கினார். இதனை தொடர்ந்து, திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் ரம்யா முத்து குமார் , 78 வது சுதந்திர தின கொடியை ஏற்றி மரியாதை செய்தார் .இதில் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர் .
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் , ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியதுடன் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment