திருமங்கலம் அருகே கழிவு நீர் வாறுகாலில் விழுந்து கூலித் தொழிலாளி பலி கழிவுநீர் கால்வாய் கட்டாததால் உடலை எடுக்க மறுத்து சாலை மறியல் போராட்டம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 2 July 2024

திருமங்கலம் அருகே கழிவு நீர் வாறுகாலில் விழுந்து கூலித் தொழிலாளி பலி கழிவுநீர் கால்வாய் கட்டாததால் உடலை எடுக்க மறுத்து சாலை மறியல் போராட்டம்

 


திருமங்கலம் அருகே கழிவு நீர் வாறுகாலில் விழுந்து கூலித் தொழிலாளி பலி கழிவுநீர் கால்வாய் கட்டாததால் உடலை எடுக்க மறுத்து சாலை மறியல் போராட்டம்


 திருமங்கலம் அருகே வாறுகாலில் விழுந்து கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்' பல நாட்களாக கழிவுநீர் கால்வாய் கட்டாததால் வாலிபர் உயிரிழந்ததாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


திருமங்கலம் அருகேயுள்ள சின்ன உலகாணியை சேர்ந்தவர் மகாலிங்கம்.இவரது இரண்டாவது மகன் ஜெயபாண்டி (எ) மாரியப்பன் (35). கூலித் தொழிலாளி. சின்ன உலகாணி கிராமத்தில் ஒரு பக்க பகுதியின் கழிவு நீர் மற்றொரு புறபகுதியில் சென்று குளம் போல் தேங்கி நின்று வருகிறது. சின்ன உலகாணி கிராம பொதுமக்கள் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் வாறுகால்கட்ட வில்லை இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஜெயபாண்டி பணி முடித்து வீட்டிற்கு திரும்பினர். இருளில் தவறி ஜெயபாண்டி கழிவு நீர் வாறுகாலில் விழுந்தார். இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் எழும்ப முடியாமல் ஜெயபாண்டி உயிரிழந்தார். இன்று காலை கழிவு நீர் கால்வாயில் பிணமாக கிடந்த ஜெயபாண்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமக்கள் சின்ன உலகாணி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் மறியல் நடந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன், எஸ்.ஐ பாலுச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினர்.கள்ளிக்குடி பிடிஓ தங்கவேலு வாறுகால் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. பின்னர் போலீசார் ஜெயபாண்டி உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருமங்கலம்  செய்தியாளர் R. வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad