மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மதுரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி சட்டத்திற்கு புறம்பாக நகராட்சி எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதால் திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகளுக்கு கட்டாய சுங்க கட்டணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது இது தொடர்பாக வாகன ஓட்டிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விளக்க அளிக்கப்பட்டது.
ஆனாலும் அவ்வப்போது உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் முழுவதும் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது கடந்த நான்கு ஆண்டுகளாக திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் வாகனங்களுக்கு சுங்க சாவடியை கடந்து சென்றதாக கட்டணம் வழங்க வேண்டும் என கப்பலூர் சுங்கச்சாவடி சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில் திருமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து 24 ஆம் ஆண்டு வரை நான்கு வருடங்களுக்கு 22 லட்சத்து 74 ஆயிரத்து 150 ரூபாய் சுங்க கட்டண பாக்கி இருப்பதாக கப்பலூர் சுங்கச்சாவடி சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் திருமங்கலம் முத்தாலம்மன் தெருவை சேர்ந்த தவ்பாண்டி என்பவரின் காருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக 5, லட்சத்து 27 ஆயிரத்து 690 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமென்றும், பிரபாகரசுந்தர லிங்கம் என்பவருக்கும் 3 லட்சத்து 72 ஆயிரத்து 710 ரூபாய் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் 150 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக சுங்க சாவடியை கடந்து சென்றதாக மூன்று லட்சத்திலிருந்து 30 லட்சம் வரைக்கும் ஒவ்வொரு வாகன ஓட்டிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருமங்கலம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுகிறது.
திருமங்கலம்
செய்தியாளர்
R. வினோத் பாபு
No comments:
Post a Comment