மதுரையில் கோவில் கும்பாபிஷேகத்தில் சுவாமிக்கு படைப்பதற்காக சீர் பொருட்களை ஜாதி மதம் கடந்து எல்லாரும் ஓர் இனம் என்று செய்து காட்டி ஊர்வலமாக எடுத்துவந்த இஸ்லாமிய பெண்கள். கோவிலில் உற்சாக வரேவற்பு அளித்த இந்துக்கள். நல்லிணக்க விழாவாக மாறிய கோவில் கும்பாபிஷேகம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 12 July 2024

மதுரையில் கோவில் கும்பாபிஷேகத்தில் சுவாமிக்கு படைப்பதற்காக சீர் பொருட்களை ஜாதி மதம் கடந்து எல்லாரும் ஓர் இனம் என்று செய்து காட்டி ஊர்வலமாக எடுத்துவந்த இஸ்லாமிய பெண்கள். கோவிலில் உற்சாக வரேவற்பு அளித்த இந்துக்கள். நல்லிணக்க விழாவாக மாறிய கோவில் கும்பாபிஷேகம்.


மதுரையில் கோவில் கும்பாபிஷேகத்தில் சுவாமிக்கு படைப்பதற்காக சீர் பொருட்களை ஜாதி மதம் கடந்து எல்லாரும் ஓர் இனம் என்று செய்து காட்டி ஊர்வலமாக எடுத்துவந்த இஸ்லாமிய பெண்கள். கோவிலில் உற்சாக வரேவற்பு அளித்த இந்துக்கள். நல்லிணக்க விழாவாக மாறிய கோவில் கும்பாபிஷேகம்.



மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள 50ஆண்டுகள் பழமைவாய்ந்த மந்தைம்மன் மற்றும் வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலின்  கும்பாபிஷேக விழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் காந்திநகர் பகுதியில் உள்ள இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.


இதனையடுத்து கோவில் கும்பாபிஷேக விழாவில் அம்மனுக்கு படைப்பதற்காகவும், பூஜைக்கு பயன்படுத்துவதற்காகவும் சேலை, பூக்கள், பழங்கள் மற்றும் பூஜைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை தாம்புழ தட்டுகளில் வைத்து இஸ்லாமிய பெண்கள் ஊர்வலமாக எடுத்துவந்து கோவிலுக்கு வருகை தந்தனர். அப்போது சீர்வரிசை ஊர்வலத்தின்போது இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து சுவாமி வீதிஉலா முன்பாக  ஊர்வலமாக வருகை தந்தனர். அப்போது ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் நடனமாடியபடி உற்சாகமாக சென்றடைந்தனர்.


பின்னர் கோவிலுக்கு சென்றடைந்த இஸ்லாமியர்களுக்கு கோவிலில் இந்துக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளின் போதும் யாகசாலையின் போது அங்கு நின்ற இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு சமூக நல்லிணக்கம் வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டனர்.


காந்திநகரில் முதன்முறையாக நடைபெற்ற மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டது சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.


இது குறித்து பேசிய கிராமத்தினர் : எங்களது பகுதியில் மதவேறுபாடின்றி அனைவரும் சகோதரர்களாக பழகிவருகிறோம், இந்நிலையில் கோவில் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலமாக கோவில் கும்பாபிஷேக விழா சமத்துவ விழாவாக நடைபெற்றது அனைத்து தரப்பினருக்கும் எல்லையில்லா சந்தோஷத்தை அளித்து முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad