திருமங்கலம் அருகே ஆதி சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 12 July 2024

திருமங்கலம் அருகே ஆதி சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


 திருமங்கலம் அருகே ஆதி சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


 மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சாத்தங்குடி கிராமத்தில் ஆண்டி குளம் 18ம் படி கருப்பு துணையை முன்னிட்டு அங்குள்ள கிராம தெய்வங்களை முன்னிட்டும் ஒன்பது பஞ்சாயத்து காரர்கள் தலைமையில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆதி சிவன் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நேற்று காலை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு கால யாகசாலை பூஜைகள் வேமந்திரங்கள் முழங்க திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் பட்டர் சீனு சிவாச்சாரியர் புன்னிய தீர்த்தங்களை கோபுர கலசத்தில் ஊற்றினார். இந்த கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். பக்கத்து கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும்அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகமிட்டியினர் செய்திருந்தினர்.


திருமங்கலம் செய்தியாளர் R.வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad