மதுரை மாநகரிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் தோப்பூர் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் மின் கம்பங்களை மாற்றியமைக்காமல் நடைபெற்ற சாலை விரிவாக்க பணி- வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 16 July 2024

மதுரை மாநகரிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் தோப்பூர் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் மின் கம்பங்களை மாற்றியமைக்காமல் நடைபெற்ற சாலை விரிவாக்க பணி- வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம்


மதுரை மாநகரிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் தோப்பூர் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் மின் கம்பங்களை மாற்றியமைக்காமல் நடைபெற்ற சாலை விரிவாக்க பணி- வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம்.


மதுரை தோப்பூர் பகுதியில் தென் மாவட்டங்களின் முக்கிய திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் மாநகர் பகுதியிலிருந்து தோப்பூர் பகுதியிக்கு செல்லும் நெடுஞ்சாலைகள் வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


மதுரை மாநகரிலிருந்து தோப்பூர் மற்றும் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் நெடுஞ்சாலை பகுதிகளான ஹார்விபட்டி, திருநகர் பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாக சாலை விரிவாக்க பணி 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.


இந்த விரிவாக்க பணிகள் 70% முடிந்த நிலையில் ஹார்விபட்டியிருந்து திருநகர் செல்லக்கூடிய சாலையில் அடுத்தடுத்து மூன்று மின்கம்பங்கள் சாலை ஓரத்தில் மாற்றி அமைக்கப்படாமலே விரிவாக்க பணிகள் நடைபெற்று உள்ளது.


இதனால் மதுரையிலிருந்து நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 வாகன விபத்துக்கள் நடைபெறுவதற்கு முன்பு நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad