திருமங்கலம் இறையன்பு நூலகத்தின் 4-வது ஆண்டு விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 16 July 2024

திருமங்கலம் இறையன்பு நூலகத்தின் 4-வது ஆண்டு விழா:

 


திருமங்கலம் இறையன்பு நூலகத்தின் 4-வது ஆண்டு விழா: 


முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி. சித்தன் பங்கேற்பு திருமங்கலம், ஜூலை 14-7-2024 மதுரை மாவட்டம்,திருமங்கலம் நகரிலுள்ள இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 4 வது ஆண்டு விழாவில் முன்னாள் எம்.பி.. என்.எஸ்.வி சித்தன் பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.


திருமங்கலம் நகர் பகத்சிங் தெருவிலுள்ள நூலக வளாகத்தில் நடைபெற்ற இலக்கிய பேரவை செயலாளர் சு.சங்கரன் தலைமைவகித்தார். கோவை பா. மகேஸ்வரி, வி.பி.மதுரா பேக்கரி உரிமையாளர் பாலகிருஷ்ணன். கம்பன் கழக செயலாளர் மா.அய்யாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகத்தின் நிறுவனர் நா.பார்த்தசாரதி வரவேற்று பேசினார். சிவரக்கோட்டை மேகலாதேவி, ஆசிரியை தாமரைச்செல்வி ஆகியோர்  நிகழ்வினை தொகுத்து வழங்கினர். அறிவோம் முதுமுனைவர் இறையன்பு எனும் தலைப்பில் ஆசிரியர் மு.செந்தில் ஆறுமுகம் உரையாற்றினார்.

மும்பை பேராசிரியர் நா.திருவேங்கிட சாமி, முதுகலை ஆசிரியர் ராஜேந்திரன், த.மு.எ.க.ச.  மக்கள் நலச்சங்க தலைவர் சக்கையா, அன்னை வசந்தா டிரஸ்ட் நிறுவனர் ரகுபதி,  முதுகலை ஆசிரியர் ஜெய பால கிருஷ்ணன், இலக்கியச் சுடர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரைவழங்கினர்.


பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு இறையன்பு படைப்புகளில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையும், மனித நேயமும் என்ற தலைப்பில் நீண்ட கருத்துரை வழங்கினார். பின்னர் சாதனையாளர்களான வா. நேரு, தலைமை ஆசிரியர் ச.இளமாறன், பொறியாளர் க.சிவக்குமார் ஆகியோர் இந்நிகழ்சியில் பாராட்டி கவுரவிக்கப்பட்டது. பின்னர் இதனைத் தொடர்ந்து நிறைவாக முன்னாள் எம்.பி., என்.எஸ். வி.சித்தன் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவிதை, கட்டுரை, திருக்குறள் மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவின் நிறைவில் இறையன்பு நூலக மேற் பார்வையாளர் அ.தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார்.


திருமங்கலம் செய்தியாளர் R. வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad