இயந்திரத்திற்கு வேலை கொடுக்காதே மனிதர்களுக்கு வேலை கொடு பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 16 July 2024

இயந்திரத்திற்கு வேலை கொடுக்காதே மனிதர்களுக்கு வேலை கொடு பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்.

 


இயந்திரத்திற்கு வேலை கொடுக்காதே மனிதர்களுக்கு வேலை கொடு பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம். 


மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் செல்லபாண்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரையூரை சுற்றியுள்ள கிராமங்களான சாப்டூர், டி. கிருஷ்ணாபுரம், கும்பல் நத்தம், துல்லுக்குட்டி நாயக்கனூர், ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர் குறிப்பாக நூறு நாள் வேலையை இயந்திரத்தை (JCP)வைத்து வேலை வாங்குகின்றனர் அதிகாரிகள் மனிதர்களுக்கு வேலையை கொடு என்று கோஷங்கள்யிட்டு தாசில்தார் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கூட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வால் விவசாயிகள் அனைவரும் உரங்கள் வாங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றோம் மேலும் வனத்துறை அதிகாரிகள் விவசாய நிலங்களை ஒரு சென்ட் 250 ரூபாய்க்கு விற்று வருகின்றனர் இதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு லாபமும் இல்லாமல் தவித்து வருகின்றன இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று விவசாயிகள் அனைத்து தரப்பினரிடம் கோரிக்கை மனுகளை வைத்து வருகின்றோம் மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனுவை வைத்து விவசாய குறைதீர் கூட்டத்தில் கொடுத்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad