சோழவந்தான் பகுதியில் ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 23 July 2024

சோழவந்தான் பகுதியில் ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


மதுரை, சோழவந்தான் பகுதியில், அரசு போக்குவரத்து பேருந்துகளால் பொது மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் 68-ம்நம்பர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை சென்ற தடம் எண்1218 என்ற அரசு பேருந்து படிக்கட்டில் இரண்டு அடி நீளத்திற்கு படிக்கட்டு கம்பிகள் பெயர்ந்து வெளியில் நீட்டியவாறு சென்றதால், பயணிகள் அச்சமடைந்தனர். 

சோழவந்தானிலிருந்து, குருவித்துறை வரையில் இதே நிலைமையில் காலை 8:30க்கு சென்ற பேருந்தில் மாணவர்கள்  பயணம் செய்வதற்கு அச்சமடைந்து  பேருந்தில் ஏறாமல், பேருந்து நிறுத்தததிலேயே நின்றனர்.  மேலும், பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால், அடுத்த பேருந்து எப்போது வரும் என, பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். 


படிக்கட்டில் கம்பிகள் நீட்டியவாறு சென்ற பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். இது போன்ற, பேருந்துகளை முறையாக பராமரிப்பு பணிகள் செய்து பயன்படுத்த வேண்டும் என, பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad