3 நாள் மின்னொளி கபாடி போட்டிகள் நடை பெற்றது. முதல் பரிசாக தென்னவன் அணிக்கு கோப்பையும், 25ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. பணமும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக அவனியாபுரம் அணிக்கு வெற்றிக்கோப்பையும், 20 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசாக காவல் துறை அணிக்கு, 15 ஆயிரம் ரூபாய் பணமும் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், ஆறுதல் பரிசாகநான்கு ஐந்து ஆறு ஏழு இடங்களில் வந்த கபடி அணிக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும் சிறிய கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
அவனியாபுரம் 92வது வார்டு மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு வெற்றிக் கோப்பையையும் வழங்கி பாராட்டினார். மேலும், நகர்புறத்தில் உள்ள இளைஞர்கள் தற்போது உடற்பயிற்சியின்றி தவறான வழிகளுக்கு செல்கின்றனர். அதனை மாற்றும் நோக்கத்தில் இளைஞர்களின் உடல்நலம் பேனவும், விளையாட்டு துறையில் சாதனை புரியவும் கபடி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது என, தெரிவித்தார்.
வருங்காலத்தில் அவனியாபுரம் பகுதி இளைஞர்கள் தமிழக அணி மற்றும் இந்திய அணியில் தேர்ச்சி பெற்று சிறந்த சாதனை புரிய வேண்டும் என, கூறினார். 2 ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி போட்டி விழாவிற்கான ஏற்பாடுகளை, வெள்ளக்கல் கிராம இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment