மதுரையில் போலீசார் அபராத்திற்கு பயந்து ஹெல்மெட்டை திருடி சென்ற இளைஞர்கள்; CCTV காட்சிகள் வெளியீடு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 23 July 2024

மதுரையில் போலீசார் அபராத்திற்கு பயந்து ஹெல்மெட்டை திருடி சென்ற இளைஞர்கள்; CCTV காட்சிகள் வெளியீடு


மதுரையில் போலீசார் அபராத்திற்கு பயந்து ஹெல்மெட்டை திருடி  சென்ற இளைஞர்கள்; CCTV காட்சிகள் வெளியீடு


மதுரை மாநகர் பகுதிகளில் சாலை விபத்துகளின் போது உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள்  தலைக்கவசம் அணிவது கட்டாயம் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.


மேலும் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் பெரும்பாலானோர் முறையாக தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்கின்றனர்.


இந்த நிலையில் மதுரை பைபாஸ் சாலையில் நேரு நகர் உள்ள பிரபல டயர்  நிறுவனத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மீது வைக்கப்பட்டிருந்த ஹெல்மட்டை இரண்டு இளைஞர்கள் திருடிக் கொண்டு செல்லும் தற்போது cctv காட்சிகள் வெளியாகி உள்ளது.


போக்குவரத்து காவலர்கள் விதிக்கும் அபராததிற்கு பயந்து ஹெல்மெட்டை திருடி சென்றார்களா...? அல்லது வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட ஹெல்மெட்டை திருடி சென்றார்களா..? என்பது குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீஸ் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக தலைக்கவசத்தை இழந்த வாகன ஓட்டி சாலையில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி அபராதம் விதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad