விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் கிடா முட்டு திருவிழா - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 20 July 2024

விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் கிடா முட்டு திருவிழா


விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் கிடா முட்டு திருவிழா


மதுரை மாவட்டம்
விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ பி என் வல்லரசு நல்லாசியுடன் மாவீரன் தணித்துரை பிட்டர் காசி ஆண்டனி பிரகாஷ் நினைவாக நண்பர்கள் நடத்தும் மூன்றாம் ஆண்டு கிடாய் சண்டை நடைபெற்றது  அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இன்று காலை கிடாய் முட்டு சண்டை நடந்தது.  பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன.இந்நிகழ்ச்சிக்கு கல்புளிச்சான்பட்டி விழா கமிட்டி ஏற்பாட்டாளர்கள் முத்துப்பாண்டி, வீரசிங்கம் கர்ணன் சதீஷ் ரகு பவித்ரு பால்பாண்டி கேப்டன் அப்பாசாமி காசி கண்ணன் திருநாவுக்கரசு அருள் பாண்டி மற்றும் கல்புளிச்சான் பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்
இந்த கிடாய் முட்டு சண்டையில் கல்புளிச்சான் பட்டி கிராம் மற்றும் மதுரை,சிவகங்கை, விருதுநகர்,ராமநாதபுரம்,திண்டுக்கல்,தேனி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து  80கிடாய் ஜோடிகள் போட்டியில் கலந்து கொண்டன. போட்டிகள் 75 முட்டுகளாக நடத்தப்பட்டனகலந்துகொண்ட கிடாய்களுக்கு கமிட்டி சார்பாக முதல் பரிசாக 10 கிலோ அண்டாவும் இரண்டாவது பரிசாக ஆறு கிலோ அண்டாவும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கிடாய் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்களும் மெடல்களும் வழங்கப்பட்டன நடுவர்களாக கல்புளிச்சான் பட்டியைச் சேர்ந்த சுரேஷ் சந்திரன் உள்பட பத்துக்கு மேற்பட்டோர் இருந்தனர் மருத்துவர்கள் கீர்த்தனா தேசிங்குராசா தலைமையில் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர் உசிலம்பட்டி.டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் செக்கானூரணி இன்ஸ்பெக்டர் திலகரானி மற்றும் விக்கிரமங்கலம் சார்பு ஆய்வாளர்அசோக்உள்பட 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்..பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிடாய் முட்டு ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டினை கண்டு ரசித்தனர். கிடா சண்டையில் பங்கேற்க வந்த  அனைவருக்கும் உணவு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கல்புளிச்சான்பட்டி கிராம நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக  செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad