ஆண்டிபட்டி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 20 July 2024

ஆண்டிபட்டி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.


ஆண்டிபட்டி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.




மதுரை, வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை அமைச்சர் பி. மூர்த்தி துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபட்டி ஊராட்சியில் விராலி ப்பட்டி, செம்மி னிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சை கட்டி,
ராமையம்பட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்கு மக்களு டன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, வணிகவரி மற்றும்
பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.
மூர்த்தி தலைமை தாங்கி, குத்து
விளக்கேற்றி துவக்கி வைத்தார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் ராமச்சந்திரன், யூனியன் கமிஷனர்கள் லட்சுமி காந்தம்,
கதிரவன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிமன்றத்தலைவர் மீனாள் வரவேற்றார். இந்த முகாமில், பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், ஒன்றியச் செயலாளர் பால. ராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர் ஜெயகாந்தன், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் காளியம்மாள் ஜெயபாலன், ஜோதிமீனா, குருமூர்த்தி, சாந்தி, குணசுந்தரி, துணைத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் செந்தாமரை, சரஸ்வதி ,தனலட்சுமி புஷ்பலதா, மகாராஜன், சுந்தரிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.  முகாமில், வருவாய்த்துறை கோரிக்கைகள் தொடர்பாக 345 மனுக்களும், பிறதுறையை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக 128 மனுக்களும், மொத்தம் 473 மனுக்கள் பெறப்பட்டது. முடிவில், ஊராட்சி செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad