மதுரை மாவட்டம் சோழவந்தானில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது சாலையின் நடுவில் வந்த மாடு மோதியதில் தவறி விழுந்து பட்டதாரி இளைஞர் பலி. தொடரும் இந்த மாடு மோதி உயிர் இழப்பு.
சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் கணேஷ் குமார் வயது 22 இவர் பட்டதாரி வாலிபர் தனது படிப்பை முடித்துவிட்டு வாடிப்பட்டி உள்ள ஜவுளி பூங்காவில் வேலை செய்து வருகிறார் நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்து தச்சம்பத்துக்கு சென்று கொண்டிருந்தபோது ஆர் எம் எஸ்காலனி அருகே ரோட்டில் திரிந்து கொண்டு இருந்த மாடுகளால் விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலைமையில் கணேஷ் குமார் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி முதல் சிகிச்சை பெற்று மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் நேற்று மாலை சிகிச்சை பயனளிக்காமல் கணேஷ்குமார் இறந்துவிட்டார் இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இதுகுறித்து சோழவந்தான் சண்முகம் கூறியதாவது சோழவந்தான் காமராஜர் சிலையிலிருந்து விவேகானந்த கல்லூரி வரை காலையிலிருந்து இரவு வரை வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகள் ரோட்டில் விடுவதால் தினசரி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் செவி சாய்க்க தான் ஒரு திறமையான வாலிபரை இந்த ரோட்டில் பிரியக்கூடிய மாடுகளால் இழந்து விட்டோம் இது போன்ற துயர சம்பவம் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டில் திரியக்கூடிய மாடுகள் இதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment