சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் விவசாய நிலத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றகளை எடுக்கும் பெண்கள் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 22 July 2024

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் விவசாய நிலத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றகளை எடுக்கும் பெண்கள் கோரிக்கை.


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் சாலை ஓரம் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாய நிலையங்களில் களையெடுக்கும் பெண்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இந்த மதுபான கடையால் பொதுமக்கள் மற்றும் விவசாய வேலை செய்யும் பெண்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

குறிப்பாக 12 மணிக்கு மதுபான கடையை திறந்தவுடன் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி அருகில் உள்ள வாழைத்தோப்பு தென்னந்தோப்புகளில் கும்பலாக அமர்ந்து மது அருந்துவதாகவும் அவ்வாறு மது அருந்துபவர்கள் காலி மது பாட்டில்களை போதையில் உடைத்து விட்டு விவசாய நிலங்களில் வீசி செல்வதாகவும் ஆகையால் விவசாய வேலை செய்பவர்களின் கால்களில் காலி பாட்டில்கள் குத்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படுவதாகவும்  சாலை  ஓரத்தில் மதுபான கடை இருப்பதால் மது பிரியர்கள் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் செல்லும்போது விபத்துகள் ஏற்படுவதாகவும் ஆகையால் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த மதுபான கடையை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியில் விவசாயக் கூலி வேலை பார்க்கும் பெண்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் காலி மது பாட்டில்கள் வாழை தோப்புகளிலும் தென்னந்தோப்புகளிலும் குவியலாக இருப்பதால் விலை நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்  விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக மன்னாடிமங்கலம் அருகில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad