மணக்குடி லூர்து நகர் லூர்துஅன்னை தேவாலயத்தில் பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினர் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 22 July 2024

மணக்குடி லூர்து நகர் லூர்துஅன்னை தேவாலயத்தில் பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினர்


மணக்குடி  லூர்து நகர் லூர்துஅன்னை  தேவாலயத்தில் பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினர்.


கன்னியாகுமரி அடுத்த லூர்து நகரில் திரைப்பட   தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின்  புலி பட தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பல்வேறு பொதுப்பணிகளை அவரது சொந்த செலவில் பல்வேறு பணிகளை குமரி மாவட்டத்தில் செய்து வருகிறார்.


மணக்குடியில் அண்மையில் ஒரு கலையரங்கம் அதன் அருகிலே ஒரு விளையாட்டு மைதானம் என்பதை பி.டி.செல்வகுமார் அவரது சொந்த செலவில் அந்த பகுதியில் செய்து கொடுத்தார்


மணக்குடி பகுதியில் உள்ள  லூர்து நகர் அந்த பகுதி மக்கள்  பி.டி.செல்வகுமாரிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில். இன்று அதற்கான அடிக்கல் நாட்டும் பணியை அருட்தந்தை அவர்கள் ஜெபித்து தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக. மணக்குடி ஊர் தலைவர்  ரெம்ஜூயூஸ்,பொதுமக்கள் , தேவாலய இணை பங்கு தந்தை ஜான் போஸ்கோ,ஆலையப்பணி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் முன்னிலையில் பங்கு தந்தை செங்கல்"ஒன்றை பி.டி.செல்வகுமாரிடம் கொடுத்து ஆலையம் பணியை தொடங்கி வைத்தார். அந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் ஆலையம் கட்டுவோம், ஆலையம் கட்டுவோம் என உறக்க சொன்னார்கள்.


மணக்குடி ஊர் மக்கள் மத்தியில் பேசிய புலிப்படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் பேசும் போது. புனித லூர்து அன்னையின் ஆலையத்தின் பணியை அருள் நிறைந்த மாதா வாழ்த்துவது போன்று நம் கண் எதிரே மழை நீர் துளிகள் புனித நீராக தெளிப்பது போன்ற சூழலே காண்பதே ஒரு அற்புதம். இங்கே கூடியியுள்ள லூர்து அன்னையின் பக்தர்கள் ஆலையம் கட்டுவோம் என பல முறை ஓங்கி ஒலித்த குரலில் மணக்குடி ஊர் மக்களின் நம்பிக்கை வெளிப்படுவதை காண்கிறேன். புனித லூர்து அன்னையின் அருளால் எவ்விதமான பொருளாதாரம் தடையும் இல்லாது பணிகள் தொடர்ந்து விரைவில் புனித லூர்து அன்னையின் புதிய ஆலைய அர்ச்சிப்பு தினத்தில் மீண்டும் கூடுவோம் என பி.டி. செல்வகுமார் அவரது பேச்சில் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலப்பை மக்கள் மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், குமார், வர்கீஸ், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad