மதுரை விமான நிலைய புதிய கண்காணிப்பு கோபுரத்தில் திடீர் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் சேதம் பாதுகாக்கப்பட்ட பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்பு குறைபாடா அல்லது சதிவேலையா என அதிகாரிகள் ஆய்வு
மதுரை விமான நிலையம் உள்ளபகுதியில் ரூபாய் 20 கோடி செலவில் புதியகண்காணிப்பு கோபுர கட்டிடம் பணிகள் நடைபெறுகிறது.
ஆறு மாடிகள் கொண்ட புதிய கண்காணிப்பு கோபுர கட்டிடத்தில் தரை தளத்தில் திடீர் தீ விபத்து.
கண்காணிப்பு கோபுரத்திற்கு முழுமையான மின் இணைப்பு இல்லாத போது தற்காலிக மின் இணைப்புடன்பணியில் இருந்த மின்சாதன ஊழியர்கள் வேலைவேலை செய்யும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதில் கண்காணிப்பு கோபுரத்திற்கு பொருத்த வாங்கி வைத்திருந்த அதி நவீன மின்சாதனங்களில் தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் கண்காணிப்பு கோபுர பணியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது விமான நிலைய பாதுகாப்பு பணியில் குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஊழியர்கள் அஜாக்கிரதையுடன் செயல்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கேணங்களில்
விமான நிலைய அதிகாரிகள் விசாரணை.
தீ விபத்து குறித்து உடனடியாக விமான நிலைய தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து தீயணைத்ததினால் பெரிய அளவில் விபத்து , மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு மத்தியத் தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்ட் விஸ்வநாதன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment