மதுரை விமான நிலையத்தில் இணையதள பிரச்சனை காரணமாக இன்றும் மதுரை விமான நிலையத்தில் இருந்து காலையில் செல்லக்கூடிய பெங்களூரு மற்றும் சென்னை செல்லும் இரண்டு விமான சேவை ரத்து
மைக்ரோசாப்ட் இணைய தள பிரச்சனை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை விமான நிலையத்திலும் இணையதளம் சேவை பிரச்சினை நேற்றிலிருந்து இன்றும் 2வது நாளாக நீடித்து வருவதன் காரணமாக விமானங்கள் வருவதிலும் இங்கிருந்து புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
மேலும் விமானத்தில் செல்லக்கூடிய போர்டிங் பாஸ் தற்காலிகமாக கைகளால் எழுதி பயணிகளிடம் வழங்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இணையதள பிரச்சனை காரணமாக நேற்று முழுவதும் இரண்டு விமானங்கள் ரத்து மற்றும் இரண்டு விமான சேவைகள் தாமதம் என மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது.
இன்று காலை செல்லக்கூடிய சென்னை மற்றும் பெங்களூர் விமான சேவை ரத்து என தகவல் விமான நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை 6.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 7.20 மதுரை விமான நிலையத்திற்கு வந்தடையும்.
அதேபோல் 6.20 பெங்களூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 7.35 மணிக்கு மதுரை விமான நிலையம் இண்டிகோ விமானம் வந்தடையும் இந்த இரண்டு விமான சேவையும் ரத்து என விமான நிலைய வட்டாரத்தில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment