திருமங்கலம் அருகே அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் 14.06.2024 மகா கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, கோ பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணி அளவில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்க்கு புனித நீர் ஊற்றினர். இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக மெட்டல் போர்டு தலைமை செயல் அலுவலர் ஆ. காசி ராஜன் கலந்து கொண்டார். மேலும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு காளிஅம்மனை தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment