மதுரை, வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பேரூராட்சி வரி பாக்கி ரூ.8 கோடி உள்ளதாக அமைச்சரிடம் பேரூராட்சி தலைவர் மனு கொடுத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன், கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர். காந்தியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தாதம்பட்டியில் நான்கு வழிச்சாலையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா 107.47 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை மனைபிரிவில் சுமார் 25 தொழிற்சாலைகள் பேரூராட்சியின் எந்தவித அனுமதியுமின்றி சுமார் 14 வருடங்களாக இயங்கி வருகிறது.
பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டிட வரைபட அனுமதி கட்டணம் மற்றும் அதன் தொடர்புடைய கட்டணங்கள் காலியிட வரி, சொத்து வரி மற்றும் தொழில் வரி கட்டணங்கள் செலுத்தப்படாமல் உள்ளது. சுமார் 4000 பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், 14 வருடமாக இப்பணியாளர்களுக்கு தொழில் வரி நாளது தேதி வரை செலுத்
தப்படவில்லை. தொழில்வரி செலுத்தாத காரணத்தினால் தோராயமாக பேரூராட்சிக்கு தொழில்வரி பாக்கி மட்டும் ரூ.28,00,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.மேற்கண்ட குறைபாடு தணிக்கை அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகளில் இயங்கும் மின்மோட்டார்களுக்கு அதன் குதிரை திறனுக்கு ஏற்ப தொழில் உரிமை கட்டணம் செலுத்த வேண்டும். 14 வருட காலமாக தொழில் உரிமை கட்டணம் செலுத்தப்படவில்லை கட்டிட உரிமை கட்டணம் மற்றும் அதன் தொடர்புடைய கட்டணங்கள் ரூ.8,00,000வரை நிதியிழப்பு ஏற்பட்டு வருகிறது. வாடிப்பட்டி பேரூராட்சிக்கு அடிப்படை வசதிக்கான குடிநீர் திட்டப்பணிகள், சாலை வசதி ,வடிகால் வசதி, தெரு மின்விளக்கு வசதிகள் பொதுமக்களுக்கு செய்து கொடுக்க நிதி பற்றாக்குறையாக உள்ளது.
மேற்படி நிறுவனத்தில், உள்ள கட்டிடங்களுக்கு கட்டிட உறுதித் தன்மை சான்று, தீயணைப்புத்துறை தடையில்லா சான்று, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று, நாளதுதேதி வரை, வாடிப்பட்டி பேரூராட்சியில் சமர்ப்பிக்கப்படவில்லை.மேலும், நகர் ஊரமைப்பு துறை மூலம் கட்டிட வரைபடம் அனுமதியும் பெறப்படவில்லை. மேற்காணும் சான்றுகள் சமர்ப்பிக்கப்படாததால், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொழிற்சாலைகளுக்கு கட்டிட வரைபட உரிமம் பெறாமல் நாளைய தேதி வரை இயங்கி வருகிறது. இதனால், சொத்து வரி மற்றும் இதர கட்டிடங்கள் நிர்ணயம் செய்ய இயலவில்லை. இது நகராட்சி நிர்வாகம் 1920 சட்ட விதிகளின்படி தோராயமாக சுமார் ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேற்காணும்நிறுவனத்தினர் ரூ.1,05,00,000 மட்டும் வங்கி வரைவோலை மூலம். பேரூராட்சிக்கு செலுத்தப்பட்டது.
பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் தோராயமாக ரூ.8,00,00,000 நிலுவையாக இருப்பதால் ரூ.1,05,00,000 வரவு காசோலையாக பெற்று இதர செலவினங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது.நாளது தேதி வரை பலமுறை அறிவுறுத்தியும் மேற்காணும் நிறுவனம் எந்த ஒரு இதர பாக்கி தொகையை செலுத் தவில்லை. மேற்கண்ட தொகையை பேரூராட்சி மூலம் வசூலிக்க மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற் றப் பட்டு ள்ளது.மேலும், 2010 முதல் 2024 வரை பேரூராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை இந்த மனுவின் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment