திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை விழா- முன்னாள் அமைச்சர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்காக 5 கோடி 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தேனி மாவட்ட செயலாளர் ஜக்கையன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் விமான நிலைய சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த சாலையில் மேம்பாலம் கட்டும் பணியால் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமுன் பகுதி இடிக்கப்பட உள்ளது அலுவலகத்தின் முன் பகுதி இடிக்கப்படுவதால் உரிய பாதை வசதி இன்றி இருக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும் போதுமான இட வசதி இல்லாததால் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இடதேர்வும் நடைபெற்றது. திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான திட்டஅறிக்கை தயார் செய்யப்பட்டு ரூபாய் 5 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது பூமி பூஜைக்காக திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்பி உதயக்குமார் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா கோட்டாட்சியர் சாந்தி தாசில்தார் மனேஸ் குமார்,ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகன், துணைத் தலைவர் வளர்மதி அன்பழகன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் மாவட்ட அவைத் தலைவர் முருகன் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வம் உச்சப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம் பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் வழக்கறிஞர்கள் முத்துராஜா வெங்கடேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment