காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி விட்டோம். தனக்கு நேரம் வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார் அதை கொடுத்துள்ளோம். -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 19 June 2024

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி விட்டோம். தனக்கு நேரம் வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார் அதை கொடுத்துள்ளோம். -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

 


காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி  எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி விட்டோம். தனக்கு நேரம் வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார் அதை கொடுத்துள்ளோம். -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை தனக்கன்குளம் பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது அதை தொடர்ந்து வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் விருதுநகர் எம்பி மார்க்கம் தாகூர் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தால் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்:


பிரதமர் மோடியை பொறுத்த அளவில் 461 வது இடத்தில் இருந்த அதானியை உலகிலேயே இரண்டாவது பணக்காரர் ஆகிய பெருமை தான் சேரும்.


 இதுதான் மோடியின் நிச்சயம் நாட்டினுடைய விவசாயத்தை காக்க போகிறோம் என்பதெல்லாம் வாயில் வடை சுடுகிற கதைதான்.


*மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று செல்லூர் ராஜு கூறியது குறித்த கேள்விக்கு:*


அன்புக்கு நன்றி, அவரின்  பண்புக்கும் நன்றி. அவர் மதுரைக்காரன் என்பதை காட்டிவிட்டார். மதுரைக்காரர்கள் வெள்ளை மனம் படைத்தவர்கள். அவரின் வாழ்த்துக்கு எங்கள் நன்றி.


நடைபெற உள்ள முதல் பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு:


24 மற்றும் 25ஆம் தேதி பொறுப்பேற்கப்படும். 26 ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும். பிறகு அரசு அலுவலகப் பணிகள் நடக்கும், அதன் பின்னர் நிச்சயமாக எய்ம்ஸ் கட்டுமான பணிகள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கண்டிப்பாக கேள்விகள் எழுப்புவேன். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் ஒற்றுமையுடன் இந்த பாராளுமன்ற கூட்டத்தை எதிர்கொள்கிறோம். நாடாளமன்றத்தை நடத்த வேண்டும், நல்ல விவாதங்கள் வேண்டும், மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும் என்கிற நம்பிக்கையோடு செல்கிறோம். ஆனால் பாஜக அரசு நாடாளுமன்றத்தை ஐபிஎல் போட்டியை போல், சியர் லீடர்ஸ் போல எதிர்க்கட்சிகளை நினைக்கும் என்றால் தவறாக இருக்கும்.


வயநாடு தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு:


இந்தியா கூட்டணியை பொறுத்த அளவில் சில மாநிலங்களில் மாநில அளவில் கூட்டணி முடிவு செய்யப்படுகிறது அந்த வகையில் கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மாநிலங்கள் அளவில் கூட்டணி முடிவு செய்யப்படுகிறது. மாநில அளவில் கட்சிகளுக்குள் வேறுபாடு தொடர்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி என்பது டெல்லியில் ஆட்சி அமைப்பதற்காகவும், இந்தியாவை வெறுப்பு அரசியலில் இருந்து காப்பாற்றுவதற்கான கூட்டணி. அந்த வகையில் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. ஆனால் கேரளாவில் அரசியல் வேறு அதனால் இரண்டு கட்சிகளும் தனியாக போராட வேண்டியுள்ளது. 


நீட் முறைகேடு குறித்த கேள்விக்கு:


காங்கிரஸ் கட்சி வருகிற 21ஆம் தேதி நீட் தேர்விற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளுக்கு காரணம் மத்திய அரசு அதிலும் முக்கியமாக கல்வித்துறை அமைச்சர் பிரதான் அவர்களின் மேம்போக்கான பார்வை முக்கிய காரணம்.


 நீட் குளறுபடி மற்றும் விவாதம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும். 


வயநாடு வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு:


வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறைந்தபட்சம் பிரியங்கா காந்தி நான்கு லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவரின் நாடாளுமன்ற பிரவேசம் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் மிக பலமாக இருக்கும். வட இந்தியாவில் அவரது பிரச்சாரம் பலமாக இருந்தது.


 அதேபோல இந்தியா கூட்டடணியின் நாடாளுமன்ற வேட்பாளராக அவர் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். 


நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்  குறித்த கேள்விக்கு:


எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டோம். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி விட்டோம். தனக்கு நேரம் வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார் அதை கொடுத்துள்ளோம். இன்று அவர் பிறந்த நாள் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம் என மாணிக்கம் தாகூர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad