அடுத்தவருக்கு சொந்தம் நிலத்தை ஆக்கிரமித்த இரும்பு கடை தொழிலதிபர் நிலப் பிரச்சினையில் இரு தரப்பு மோதல் மதுரை கைத்தறி நகரில் பரபரப்பு போலீஸ் விசாரணை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 6 June 2024

அடுத்தவருக்கு சொந்தம் நிலத்தை ஆக்கிரமித்த இரும்பு கடை தொழிலதிபர் நிலப் பிரச்சினையில் இரு தரப்பு மோதல் மதுரை கைத்தறி நகரில் பரபரப்பு போலீஸ் விசாரணை

  


அடுத்தவருக்கு சொந்தம் நிலத்தை ஆக்கிரமித்த இரும்பு கடை தொழிலதிபர் நிலப் பிரச்சினையில் இரு தரப்பு மோதல் மதுரை கைத்தறி நகரில் பரபரப்பு போலீஸ் விசாரணை         



மதுரை ஆத்திகுளம் தேவர் காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்  இவரது மனைவி இரத்தின மாலா .
இவர் டாக்டராக  மெடிக்கல் காலேஜ் பேராசிரியராக உள்ளார் .இவரது கணவர் ராஜ்குமார் 2016இல் இறந்து விட்டார் இந்நிலையில் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர் அருகே உள்ள கைத்தறி நகர் அழகர் நகரில் ஒரு ஏக்கர் 46 சென்ட் ரத்தின மாலா வின் சொந்த இடமாக உள்ளது.



ரத்தின மாலா தனது மகன் மகளுடன்  வெளிநாட்டில்  இருப்பதால்  இந்த இடத்தை பராமரிப்பு செய்வதற்காக நிலையூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் ஒப்படைத்து உள்ளார்.



இந்நிலையில் அழகர் நகரில் உள்ள ராஜாமணி மகன் குமரேசன் ரத்தினமாலாவிற்கு சொந்தமான இடத்தில்  இரும்பு கடையில் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.



இந்த விவரம் தெரிந்து வந்த செல்வம் அவரை காலி செய்யுமாறு கூறுயதற்கு குமரேசன் தான் வைத்திருக்கும் கடைக்கு வாடகை தருவதாக செல்வத்திடம் கூறி மாதம் வாடகை கொடுத்து வந்துள்ளார்.



ரத்தினமாலா கடந்த 1.12.2023 அன்று தனது ஒரு உறவினரான திருநகர் திருவள்ளுவர் நகர் பர்மா காலனி சேர்ந்த சபரி முத்து மகன் சகாயராஜ் என்பவருக்கு ஒரு ஏக்கர் 30 சென்ட் இடத்தை பவர் கொடுத்து உள்ளார்.


மேலும் அதன் அருகே உள்ள இரண்டு சென்ட் இடம் ராஜ்குமார் மகன் ஜார்ஜ் சாமுவேல் என்பவரும் அந்த  இடத்திற்கு பவர் கொடுத்துள்ளார்.



இதனால் தான் வாங்கிய இடத்தை பார்ப்பதற்காக சகாயராஜ் சென்றபோது அங்கு குமரேசன் கடை வைத்து வியாபாரம் செய்வது தெரிய வந்தது இதனால் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் சகாயராஜ் புகார் செய்தார்.



சகாயராஜ்  பெற்ற இன்ஸ்பெக்டர் லிங்க பாண்டியன் எஸ்ஐ சீனிவாசன் இருவரும் இதை நீங்கள் நீதிமன்றம் மூலமாக சென்று உங்கள் இடத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறினர்,



இதனால் சகாயராஜ் மதுரை மத்திய குற்ற பிரிவில் புகார் செய்தார் அப்போது அங்கு வந்த குமரேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன் எனக்கூறி விசாரணைக்கு வர மறுத்துள்ளார். இதனால் சகாயராஜ் மதுரை உயர்நீதிமன்றத்தின் மூலமாக குமரேசன் விசாரணைக்கு வருவதற்காக உத்தரவு பெறுகிறார்.



இருப்பினும் அவர் இதுவரைக்கும் விசாரணைக்கு வரவில்லை இந்நிலையில் ஜார்ஜ் சாமுவேலிடம் இருந்து வாங்கிய இரண்டு சென்ட் இடத்திற்கு கல் ஊண்டுவதற்காக சகாய ராஜ் அங்கு  இன்று சென்றார் அப்போது அங்கிருந்த குமரேசன் மகன் மற்றும் அங்கு வேலை செய்த பெண்கள் சகாராஜை கல் ஊண்டுவதற்கு மறுப்பு தெரிவித்தனர் இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுவிடும் நிலை உருவானது இதனால் சகாயராஜ் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு  போன் மூலமாக புகார் செய்தார் .



அப்போது அங்கு வந்த எஸ் ஐ கார்த்திகேயன் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி சகாயராஜ் மற்றும் குமரேசனையும் விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad