சோழவந்தானில் பயணியிடம் அநாகரிகமாக பேசிய நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 7 June 2024

சோழவந்தானில் பயணியிடம் அநாகரிகமாக பேசிய நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

 


சோழவந்தானில் பயணியிடம் அநாகரிகமாக பேசிய நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: 

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை சென்ற பேருந்தில் சோழவந்தான் அருகே கீழ மட்டையான் கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் வயது 60 என்பவர் மேலக்கால் வைகை புது பாலத்திலிருந்து சோழவந்தான் வரை சென்ற பேருந்தில் டிக்கெட் எடுப்பதற்காக  7 ரூபாய் கொடுத்தபோது, நடத்துனர் பத்து ரூபாய் கேட்டுள்ளார். உடனே, அதற்கு தினசரி ஏழு ரூபாய் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில்  வருவேன் என்று ராசப்பன் கூறியுள்ளார். இதனால், கோபம் அடைந்த நடத்துனர் எனது வண்டியில் 10 ரூபாய் பத்து ரூபாய் கொடுத்தால் தான், டிக்கெட் தர முடியும் என  பேசியதாகவும், நீ ,வா வராமல் போ நீ வருவதை பார்த்துக் கொண்டா இருக்க முடியும் என, அநாகரிகமாக பேசியதுடன், 60 வயது மதிக்கத்தக்க ராசப்பன் என்பவரை மரியாதை குறைவாக போடா வெண்ணை என்றும், பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலுடன் கூறினார்.

 


தமிழக முழுவதும் பேருந்துகளில்  பயணிகளிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அன்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், செயல்படக்கூடாது என, முதல்வர் அறிவுறுத்தி இருந்த நிலையில், மதுரை மாவட்டம், சோழவந்தானில் பேருந்து நடத்துனர் பயணியிடம் அநாகரிகமான முறையில் மரியாதை குறைவாக நடந்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 


தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரும் சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் உரிய விசாரணை செய்து , தரக்குறைவாக பேசிய நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம் அனைத்து பணியாளர்களுக்கும் போக்குவரத்து துறை மேலாளர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad