மதுரையில் தொடர்ந்து 2வது நாளாக மாலை நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய கனமழை; மதுரையில் வானை மறைத்த கருமேகம்
மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகிறது.
மதுரை மாநகரின் முக்கிய சாலையிலான அண்ணா நகர், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், அண்ணா பேருந்து நிலையம், கீழவாசல், காளவாசல், தல்லாகுளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேலும் மதுரையின் முக்கிய இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஆங்காங்கே சாலையில் வேலை நடைபெற்று வருகிறதால் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை வேளையில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியான நிலையிலும் வானங்களில் செல்பவர் சாலையில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். கோடை மழை பொழிவால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment