மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் ஒரே நாளில் அரை கோடிக்கு மேல் வேளாண் விளை பொருட்கள் விற்று சாதனை.
விருதுநகர் மாவட்ட விவசாயியின் இருங்கு சோளம் சேலம் மாவட்டம் ஆத்தூர்க்கு விற்று தரப்பட்டது.
திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் தே.கல்லுப்பட்டி வட்டார விவசாயிகளின் அன்னம், BPT, செளபாக்கியா, அங்கூர் 101 என்.எல்.ஆர் மற்றும் AST-16 ரக நெல் வகைகள் சுமார் 55 டன்கள் நேரடியாக மதுரை அரிசி ஆலைகளுக்கு நேரடியாக விற்று தந்து சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் விவசாயியின் கருப்புகவனி அரிசி விற்று தரப்பட்டுள்ளது.
காளப்பன்பட்டி மற்றும் தொட்டியபட்டி விவசாயிகளின் 26டன் இருங்கு சோளம் விற்று தரப்பட்டுள்ளது.
பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் சூரியகாந்தி கோவில்பட்டிக்கு விற்று தரப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்
விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (25.06.2024) கீழ்க்கண்ட விளைபொருட்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டது.
1. விருதுநகர் மற்றும் காளப்பன்பட்டி, தொட்டியபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த நான்கு விவசாயிகளின் 50990 கிலோ இருங்கு சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக 46.50/-க்கும் குறைந்தபட்ச விலையாக 45.60/-க்கும் விலை போனது. இதன் மூலம் 33,53,964/- வர்த்தகம் நடைபெற்றது.
2. சிவரக்கோட்டை, கீழக்குயில்குடி, சித்தாலை, கிரியகவுண்டன்பட்டி நேசநேரி, மற்றும் கரிசல்கலாம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஓன்பது விவசாயிகளின் 32508 கிலோ அன்னம் ரக நெல் ஏலத்திற்கு வந்தது. நெல் மூட்டைகளை நேரடியாகவே மதுரை அரிசி ஆலைகளுக்கு விற்று தரப்பட்டுள்ளது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 25.00/- க்கும் குறைந்தபட்சமாக விலையாக 24.92/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 8,09,585/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
3. சுப்புலபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று விவசாயிகளின் 11050 கிலோ AST-16 (அம்பை 16) ரக நெல் ரகம் ஏலத்திற்கு வந்தது. நெல் மூட்டைகளை நேரடியாகவே மதுரை அரிசி ஆலைகளுக்கு விற்று தரப்பட்டுள்ளது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 21.93/- க்கும் குறைந்தபட்சமாக 19.70/-க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ 2,23,836/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
4. மேலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 5050 கிலோ என்.எல்.ஆர் (NLR) ரக நெல் ஏலத்திற்கு வந்தது. நெல் மூட்டைகளை நேரடியாகவே மதுரை அரிசி ஆலைகளுக்கு விற்று தரப்பட்டுள்ளது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 25.00/- க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 1,26,250/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
5. வில்லூர் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 1380 கிலோ BPT நெல் ஏலத்திற்கு வந்தது. நெல் மூட்டைகளை நேரடியாகவே மதுரை அரிசி ஆலைகளுக்கு விற்று தரப்பட்டுள்ளது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 26/- க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 35,880/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
6. காளப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 24000 கிலோ வரகு ஏலத்திற்கு வந்தது. கிலோ ஒன்றிற்கு 34.00/-க்கு விலை போனது. இதன் மூலம் 8,16,000/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
7. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 20 கிலோ மதிப்பு கூட்டப்பட்ட கருப்பு கவுனி அரிசி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 145/- க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 8,700/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
8. கின்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த 4750 கிலோ அங்கூர் 101 ரக நல் ஏலத்திற்கு வந்தது. இது சென்னைக்கு விற்றுத்தரப்பட்டது. கிலோ ஒன்றுக்கு 26.00/-க்கு விலை போனது. இதன் மூலம் 1,23,500/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
9. விருதுநகர் மாவட்டம் காரியபட்டி மற்றும் திருமங்கலத்தை சேர்ந்த இரு விவசாயிகளின் 501 கிலோ எள் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 125/- க்கும் குறைந்தபட்சமாக ரூ 110/-க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ 69,180/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
10. தொட்டிய பட்டி மற்றும் காளப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த இரு விவசாயியின் 21510 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 27/- க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 5,80,710/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
11. தங்களாச்சேரியை சேர்ந்த ஒரு விவசாயியின் 3300 கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 27/- க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 89,100/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
12. மருதங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயியின் 47.9 கிலோ நிலக்கடலை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ 110/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 5,269/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
13. காரைகேனி கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 761.6 கிலோ செளபாக்கியா நெல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ 23.28/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 17,730/--க்கு வர்த்தகம் நடைபெற்றது.
14. உசிலம்பட்டியை சேர்ந்த ஒரு விவசாயியின் 349 கிலோ நாட்டு கம்பு தீட்டியது ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ 75/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 26,175/--க்கு வர்த்தகம் நடைபெற்றது.
15. திருமங்கலம் மற்றும் துவரிமான் கிராமத்தை சேர்ந்த இரு விவசாயிகளின் 37 கிலோ கொப்பரை ஏலத்திற்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக 100/-க்கும் குறைந்தபட்சமாக 88/-க்கும் விலை போனது. இதன் மூலம் 4,280/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
16. திருமங்கலம் மற்றும் மருதங்குடி கிராமத்தை சேர்ந்த இரு விவசாயிகளின் 282 கிலோ மிளகாய் வற்றல் ஏலத்திற்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக 140/-க்கும் குறைந்தபட்சமாக 100/-க்கும் விலை போனது. இதன் மூலம் 35,670/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
17. பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியின் 1957.6 கிலோ சூரியகாந்தி விதைகள் ஏலத்திற்கு வந்தது. இது கோவில்பட்டிக்கு விற்று தரப்பட்டுள்ளது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக 42/- விலை போனது. இதன் மூலம் 82,219/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
ஆக மொத்தம் ரூபாய் 53,99,048/- க்கு வர்த்தகம் நடைபெற்றது.
திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வாட்ஷப் குழுக்களில் தாங்களே தங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இணைக்கலாம். அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் வேளாண் விளைபொருட்கள் விலை நிலவரத்தை அறிந்து கொள்ளவும் தங்களது விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்க கீழ்கண்ட வாட்ஸ்அப் இணைப்பின் மூலம் இணைந்து அறிந்து கொள்ளலாம்.
இதேபோல் வியாபாரிகள் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விளைபொருட்கள் இருப்பினை தெரிந்து கொள்ளவும் தேவையான விளை பொருட்களை வாங்குவதற்கும் கீழ்கண்ட வாட்ஸ்அப் இணைப்பின் மூலம் இணைந்து பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளரை 9025152075லும் மேற்பார்வையாளர் சீனிகுருசாமியை 9600802823 லும் சந்தை பகுப்பாளர் நாகஅர்ஜுனை 8754379755 லும் ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment