புதிய பாரத எழுத்தறிவு திட்டம், மதுரை மாவட்டம்.
15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 663 பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கற்பிப்பதற்காக 1865 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
இன்று மதுரை மாவட்டம், மேற்கு ஒன்றியம் சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் முதல் தெரு பகுதியில் கணக்கெடுப்பு பணியினை வட்டார கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு பார்வையிட்டனர் உடன் தலைமை ஆசிரியர் தன்னார்வலர்கள் எம். அழகு மீனாட்சி எம். தேவி ஆகியோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். சத்தியமூர்த்தி நகர் கிராம தலைவர் அழகு பாண்டி மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment