கழிவுநீர் வாய்க்காலில் அருகில் அங்கன்வாடி அமைப்பதால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் பெற்றோர்கள் அச்சம்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடனேரி கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டியதில் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்.
கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காடனேரி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த இடத்திற்கு அருகில் மகளிர் சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் உள்ளது. அதில் இருந்து துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது மேலும் இதற்கு அருகிலேயே 20 அடி அளவில் பொது கழிவு சாக்கடையும் செல்கிறது. இதனால் இங்கு அங்கன்வாடி அமைப்பதால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.இதன் காரணமாக அங்கு அமைக்கப்பட உள்ள அங்கன்வாடி மையத்தினை வேறொரு இடத்திற்கு மாற்றுமாறு காடனேரி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த கழிப்பறை, சாக்கடை உள்ளிட்ட அனைத்து புகார்களையும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கிராம பொதுமக்கள் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் வருகின்ற சனிக்கிழமை அன்று கல்லுப்பட்டி ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்வதாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment