கல்லுப்பட்டி அருகே காதல் பிரச்சினையால் வாலிபரின் தலையை வெட்டி படுகொலை செய்த வாலிபர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 26 June 2024

கல்லுப்பட்டி அருகே காதல் பிரச்சினையால் வாலிபரின் தலையை வெட்டி படுகொலை செய்த வாலிபர்.

 


கல்லுப்பட்டி அருகே  காதல் பிரச்சினையால் வாலிபரின் தலையை வெட்டி படுகொலை செய்த வாலிபர்.


மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் போராளி என்ற பிரபாகரன் (25)தந்தை முத்துவேல் கிழக்குத் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்து கோவிலாங்குளம் ஊரை சேர்ந்த அழகேந்திரன் (21) தந்தை பெயர் மாரிமுத்து இருவரும் நண்பர்கள் இருவரும் ருத்ர பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தனர். இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் தான் காதலித்த பெண்ணை நீ எப்படி காதலிக்கலாம் என்று பிரபாகரன் அழகேந்திரன் வி. சத்திரப்பட்டி காட்டுக்குள் வைத்து தலை துண்டாக வெட்டி படு கொலை செய்தார். இந்த கொலை நேற்று முன்தினம் இரவு நடந்தது. தகவல் அறிந்து வந்த சத்திரப்பட்டி போலீசார் கொலை செய்த பிரபாகரனை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad