மதுரை திருமங்கலம் அருகே மொச்சிகுளம் கிராமத்தில் 100 நாள் வேலை தரக்கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்- ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 26 June 2024

மதுரை திருமங்கலம் அருகே மொச்சிகுளம் கிராமத்தில் 100 நாள் வேலை தரக்கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்- ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு


மதுரை திருமங்கலம் அருகே மொச்சிகுளம் கிராமத்தில் 100 நாள் வேலை தரக்கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்- ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு



மதுரை கள்ளிக்குடி தாலுகா குரயூர் ஊராட்சி மன்ற தலைவர் வீரபத்திரன் சிலருக்கு மட்டுமே தொடர்ச்சியாக 100 நாள் வேலை திட்டம் தருவதாக கூறி, அவரது வீட்டிற்குச் சென்று கிராம பெண்கள் 100 நாள் வேலை திட்டம் அனைவருக்கும் பகிர்ந்து தருமாறு குறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதற்கு உடன்படாத நிலையில் மொச்சிகுளம் கிராம மக்கள் இன்று காலை திடீரென காரியாபட்டி கள்ளிக்குடி செல்லும் பிரதான சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கள்ளிக்குடி காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகின்றனர்.


ஆனால் சாலை மறியல் ஈடுபடும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்திற்கு தீர்வு காணும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த தகவல் அறிந்து வந்த பிடிஓ தங்கவேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 100 நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்குவதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தை அனைவருக்கும் முறையாக வழங்க வேண்டும் என மனு அளித்தனர் மேலூர் குரயூர் ஊராட்சி மன்ற தலைவர் வீரபத்திரன் குறித்து காவல்துறையிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.


காரியாபட்டி - கள்ளிக்குடி பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தினால் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானனர்.

No comments:

Post a Comment

Post Top Ad