வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு கள்ளிக்குடி தாலுகாவில் பயிற்சி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 13 June 2024

வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு கள்ளிக்குடி தாலுகாவில் பயிற்சி


வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு கள்ளிக்குடி தாலுகாவில் பயிற்சி.


மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா வேளாண்துறை சார்பில் ஓடைப்பட்டி கிராமத்தில் கிராம முன்னேற்ற குழுவிற்கான காரி பருவ பயிற்சி நடந்தது இப்பயிற்சியில் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா பயிற்சியை தொடங்கி வைத்தார் வேளாண் அலுவலர் கீதா காரிப் பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களில் களை மேலாண்மை குறித்து விளக்கினார். துணை அலுவலர் குமாரி லட்சுமி இயற்கை வேளாண்மை குறித்தும் மானிய திட்டங்கள் பற்றியும் விளக்கினார் ஓய்வு வேளாண் அலுவலர் மகாராஜன் மண் பரிச சோதனையில் முக்கியத்துவம் குறித்தும் வேளாண் பயிர்களில் உரங்களின் நிர்வாகம் பற்றியும் விளக்கினார் ஓடைப்பட்டி ஊராட்சி உதவி வேளாண் அலுவலர் நாக மோகன் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் தொழில்நுட்ப மேலாளர் இந்திரா தேவி பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மை குறித்தும் காட்டுப்பன்றி விரட்டி மருந்து குறித்தும் பேசினார் உதவி வேளா ண் மேலாளர் லாவண்யா நன்றி கூறினார் ஏற்பாடுகளை உதவி மேலாளர் யுவராஜ் குமரன் செய்திருந்தார். மேலும் வேளாண்துறை மூலமாக வழங்கப்படும் விதைகளை ஆய்வுக்கு உட்பட்டு வழங்குவதால் அதன் மூலம் தோட்டக்கலைத் துறை மூலமும் விதைகள் வழங்கி விவசாயிகள்  பயனடைகின்றனர். இதனால் இயற்கை உரம் மூலமாக தோட்டத்தை பராமரிப்பதற்கு விவசாயிகள் மண் பரிசோதனை மேற்கொண்டு அதற்குப் பிறகு விதைகளை தூவ வேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad