பள்ளிகள் திறப்பு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவுகள் வழங்கும் ஆலோசனை நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடை பெற்றது.
ஆரோக்கிய உணவு ஆலோசனையில் "90" கிட்ஸ்களின் உணவுகளான கடலை மிட்டாய், கம்மர்கட் , தேன் மிட்டாய் , சூட மிட்டாய் , குலுக்கி ஐஸ் போன்றவை பார்வையாளர்களை கவந்தது.
தமிழகத்தில் பள்ளி விடுமுறை முடிந்து நாளை பள்ளி திறப்பு நிகழ்வை முன்னிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகள் பழங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கானஉணவு ஆலோசனை கண்காட்சி மதுரை ரிங் ரோட்டில் உள்ள அமிக்கா ஹோட்டலில் நடைபெற்றது.
மாணவர்கள் பெற்றோர்களுக்கான ஆரோக்கிய உணவுகள் வழங்கும் ஆலோசனை கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் குழந்தைகள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் டிபன் பாக்ஸில் சத்தான உணவுகள்,முளைகட்டிய சிறுதானியங்கள்,தினமும் ஒரு பழங்கள் போன்றவையும், குழந்தைகளே சமையல் கலைஞர்களின் உதவியுடன் கேக் மற்றும் குக்கீஸ் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் "90" கிட்ஸ்களின் உணவு வகைகளான கடலை மிட்டாய் தேன் மிட்டாய், பர்பி ஐட்டங்கள், சூடமிட்டாய், குலுக்கி ஐஸ் போன்றவை தற்போதுள்ள மாணவர்களிடம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது ஆர்வமுடன் அவற்றை பார்வையிட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டனர்.
மாணவர்களுக்கான ஆரோக்கிய உணவு ஆலோசனை கண்காட்சி 5 நாட்கள் நடைபெறும். பள்ளி செல்லும் குழந்தைகள் காலை உணவுகள் மற்றும் இரவு உணவுகளை தவிர்ப்பது வழக்கமான ஒன்று. அவற்றை குழந்தைகளுக்கு பிடித்தமான. வகையில் உணவு வகைகளை வழங்கி ஆரோக்கியத்திற்கும் மனநலனுக்கும் உற்சாகப்படுத்தும் வகையில் ஆரோக்கிய உணவு கண்காட்சி அமைந்துள்ளது.
இவற்றை அமிக்கா ஓட்டல் பொது மேலாளர் பால் அதிசய ராஜ் மற்றும் தலைமை உணவு கலைஞர் கோபி விருமாண்டி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment