திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 14 June 2024

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

  


திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன் தலைமையில் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டி தர வேண்டும் .அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஒன்றிய கவுன்சிலர்களிடம் அனுமதி பெறாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். மேலும் சில கிராமங்களில் மராமரத்து பணிகள் முடிக்காமல் கிடப்பில் உள்ளது. இதை பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கூறியும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை எங்களுக்கு இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு சட்டம் சம்மந்தமான குறித்து சங்கீதா குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். இக்கூட்டத்தில் துணை தலைவர் வளர்மதி, ஒன்றிய கவுன்சிலர்கள்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், வில்சன் மற்றும் அலுவலக பணியாளர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad