கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, 300க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை - நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், தொடர்ந்து மூன்று மாத காலமாக பணிகள் தரவில்லை என்பது குற்றச்சாட்டு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 18 June 2024

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, 300க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை - நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், தொடர்ந்து மூன்று மாத காலமாக பணிகள் தரவில்லை என்பது குற்றச்சாட்டு.

 


கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, 300க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை -  நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும்,  தொடர்ந்து மூன்று மாத காலமாக பணிகள் தரவில்லை என்பது குற்றச்சாட்டு.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறக்கூடிய 100 நாள் வேலை திட்டப் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், கடந்த மூன்று மாத காலமாக பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால்,  கிராமத்தில் உள்ள பெண்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய உலகாணி, புளியங்குளம், குராயூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வரத்துக் கால்வாய் மற்றும் கண்மாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் , அதில் பணிபுரிந்த ஊழியர்களின் ஊதியத்தை இதுவரை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதுடன், பெண் தொழிலாளர்களின் ஏடிஎம் கார்டுகளை பனித்தளப் பொறுப்பாளர்கள் கைப்பற்றிக் கொண்டு, வேலை பார்க்காத பெண்கள் ஊதியத்தை பனித்தள பொறுப்பாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஒன்றிணைந்து 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஊதியத்தைஅபகரித்துக் கொண்டதுடன்,  கடந்த 3 மாத காலமாகவே இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருவதுடன்,  இதுவரை 6 லட்சம் ரூபாய் வரை பணித்தளப் பொறுப்பாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பணத்தை சுருட்டியதாக கிராம மக்கள்,  ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கவேலுயிடம் புகார் தெரிவித்தனர்.


இதனை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரி அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட தினக்கூலி தொழிலாளரான பணித்தளப் பொறுப்பாளர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து , புதிய நபர்களை நியமிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad