திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனிஊஞ்சல் திருவிழா காப்புகட்டுதலுடன் நடைபெற்றது.
ஆனி ஊஞ்சல் திருவிழா 12ந் தேதி முதல் 21ந் வரை நடைபெறுகிறது.
ஆனி ஊஞ்சல் திருவிழாவினை தொடர்ந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது .
அதன் பின்பு சுவாமி புறப்பாடாகி ஆஸ்த்தான மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தூப தீபாரதனைகள் நடைபெற்றது. பின்னர் மீண்டும் சுவாமி புறப்பாடாகி உற்சவர் சன்னதிக்கு சென்றடைந்தது.
இதேபோன்று 21 ஆம் தேதி வரை விழா நடைபெறும்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21 ஆம் தேதி ஆனி ஊஞ்சல் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக உச்சிக்கால பூஜையில் அனைத்து சுவாமிகளுக்கும் முக்கனிகளான மா, பலா, வாழை கனிகள் வைக்கப்பட்டு சிறுபூஜை நடைபெறும்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் திருக்கோயில் ஸ்தானிகப்பட்டார்கள் கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர் விழா முடியும் வரை தங்களது ரத புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment