திருமங்கலம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு புதிய வாகனம்.
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு புதிய வாகனம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை யில் தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி மூலம் இயங்கும் புதிய வாகனம் 31.59லட்சம் மதிப்பீட்டில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். நகர் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தலாம் சுமார் 16வாகனங்கள் தரப்பட்டுள்ளன. இதில் தன்னிர்வரி சொத்து வரி வீட்டு வரி ஆகியவற்றை விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் செய்ய பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் ஆதவன் அதியமான், நகர் மன்ற கவுன்சிலர்கள் சின்னசாமி, அசார், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் சுகாதார அதிகாரி சண்முகவேல் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment