திருமங்கலம் அருகே குண்டும் குழியுமாக இருக்கும் சாலை பொதுமக்கள் புகார்.
திருமங்கலம் அருகில் உச்சப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மையாபுரம் செல்லும் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்வது கூட மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சரி செய்து தருமாறு பொதுமக்கள் கூறுகிறார்கள். இங்குள்ள தனியார் பிஸ்கட் ,சைக்கிள் பிராண்ட்,கொரியர் கம்பெனி பல தொழில் சாலைகள் உள்ளதால் இங்கு வரும் கனரக வாகனங்களால் சாலை மிகவும் பெரிதும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது.இந்த தனியார் குடோன்களால் பள்ளி மாணவ மாணவியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். இதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
No comments:
Post a Comment