நட்பாகப் பழகி திருமணத்திற்கு மீறிய உறவு வைத்து பணம் மோசடி செய்ததாக திண்டுக்கல் பெண் மீது கேரளா தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 28 May 2024

நட்பாகப் பழகி திருமணத்திற்கு மீறிய உறவு வைத்து பணம் மோசடி செய்ததாக திண்டுக்கல் பெண் மீது கேரளா தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு

 


நட்பாகப் பழகி திருமணத்திற்கு மீறிய உறவு வைத்து பணம் மோசடி செய்ததாக திண்டுக்கல் பெண் மீது கேரளா தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு


கேரளா எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரசித்(46) இவர் காப்பர் கம்பிகள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக திண்டுக்கல்லுக்கு வந்த ரசித் திண்டுக்கல் சீலப்பாடி KMA நகர் பகுதியை சேர்ந்த டோனா பஸஸ்ஸி என்பவருடன் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டு பின்பு டோனாபஸஸ்ஸி கேரளா சென்று ரசித்துடன் பழகி போட்டோ எடுத்துக் கொண்டதாகவும் பின்பு அந்த போட்டோவை காட்டி மிரட்டி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டதாகவும், மேலும் திண்டுக்கல் வரச் சொல்லி ரூ.30 லட்சம் பணம் கேட்டதாகவும் தரவில்லை என்றால் அவர் மனைவி மற்றும் குடும்பம் மற்றும் சமூக வலைதளங்களில் போட்டோவை அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாகவும், மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ரசீத் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திர மோகன் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad