பள்ளிக்கல்வித்துறை- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம். .2024..25 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஆற்றல் படுத்துதல் சார்ந்து கருத்தாளர்களை தெரிவு செய்வதற்கான அடிப்படை மதிப்பீடு கூட்டம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 28 May 2024

பள்ளிக்கல்வித்துறை- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம். .2024..25 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஆற்றல் படுத்துதல் சார்ந்து கருத்தாளர்களை தெரிவு செய்வதற்கான அடிப்படை மதிப்பீடு கூட்டம்


பள்ளிக்கல்வித்துறை- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம். .2024..25  பள்ளி மேலாண்மை   குழு உறுப்பினர்களை   ஆற்றல் படுத்துதல் சார்ந்து  கருத்தாளர்களை தெரிவு செய்வதற்கான அடிப்படை மதிப்பீடு  கூட்டம் மதுரை மண்டல அளவில் 28.5.24இன்று மதிப்பிற்குரிய மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா.  சிறந்த ஆலோசனையின் படி மதுரை சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர்  சரவண முருகன் கூட்டத்தை துவக்கி வைத்து  பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு சார்ந்து ஆலோசனை வழங்கினார். அனைத்து அரசு பள்ளிகளிலும் மாதந்தோறும் முதல் வெள்ளி அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளியில் நடைபெறும் கூட்டங்களில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ள செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . கருத்தாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து  பள்ளியின் வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளுக்கு முன்னெடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மொத்தம் 413 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு செயல்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக கருத்தாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இக்கருத்தாளர்களுக்கு  மதிப்பீடு செய்து தேர்வு செய்யப்பட்டு கருத்தாளர்களாக நியமிக்கப்படுகின்றனர் .. இம் மதுரை மண்டல கூட்டத்தில்  10 மாவட்டங்களை சேர்ந்த 90( மதுரை திண்டுக்கல் தென்காசி தேனி இராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ) கருத்தாளர்கள் கலந்துகொண்டனர். மாநில முதன்மை கருத்தாளர்கள்  சரவணன்.. மரிய சூசை..  பெர்னாட்.. கருப்பசாமி.. ராஜேஷ் கண்ணன்.. கார்த்தியாயினி. யோகநந்தி.. மற்றும் வரதன்  கருத்தாளர்களாக மதிப்பீடு செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்  நாராயணன்  கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பான மதிய உணவு மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்பட்டது. இன்று மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் விவரம் இன்று வெளியிடப்படும். மண்டல அளவிலான கூட்டத்தை  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  உமாசெந்தில்வேல் குமரன் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad