தமிழக மக்கள் ஆதரவு எந்த காலத்திலும் இல்லை என்பதை தெரிந்துதான் பாஜக வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை துணைக்கு அழைக்கிறது - சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 28 May 2024

தமிழக மக்கள் ஆதரவு எந்த காலத்திலும் இல்லை என்பதை தெரிந்துதான் பாஜக வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை துணைக்கு அழைக்கிறது - சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.


 தமிழக மக்கள் ஆதரவு எந்த காலத்திலும் இல்லை என்பதை தெரிந்துதான் பாஜக வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை துணைக்கு அழைக்கிறது - சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.



எடப்பாடியாரின் தலைமையேற்று 2,000 மேற்பட்ட இளைஞர்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை அதிமுகவில் இணைந்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் தலைமையேற்று திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி பேரையூர் பகுதியை சேர்ந்த 2,000 மேற்பட்ட இளைஞர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் பார்த்திபன் முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன் தமிழரசன் தவசி மாணிக்கம் கருப்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்


மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சார சாரையாக வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்



இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு கையாளாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாகத்தின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய அணை கட்டும் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது ஆகவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரளா அரசு தொடர்ந்து இன்றைக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கக் கூடியவேலையிலே திமுக அரசு மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது நமது மக்களுடைய வாழ்வாதார மக்கள் ஜீவாதாரம் பரிவாகக் கூடிய ஒரு நிலையை இன்றைக்கு இந்த திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது தென் தமிழக மக்களுடைய ஜீவாதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் குறிப்பாக ஐந்து மாவட்டங்கள் நம்முடைய மதுரை.தேனி, திண்டுக்கல்,சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுடைய ஜீவாதார உரிமையாக வாழ்வாதார உரிமையாக இருக்கக்கூடிய இந்த அணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுகிற அரசுக்கு உள்ளது. அதையெல்லாம் மறந்து மறந்து மக்கள் நலனை அக்கறையில்லாமல் செயல்படுவது வேதனையாக இருக்கிறது .ஏற்கனவே கேரளா அரசு தொடர்ந்து பிரச்சினை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற  மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக இந்த திமுக அரசினுடைய நடவடிக்கை அமைந்திருக்கிறது. அணையை நம்பி மதுரை,திண்டுக்கல்,தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களிலே ஏறத்தாழ 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறோம். இந்த பாசன வசதி கூட கேரளாவினுடைய பிடிவாதத்தால் தான் சுருங்கி இருப்பதை எல்லோரும் அறிவார்கள் 1979 லே அன்றைக்கு 152 அடி தேக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தபோது 79க்கு முன்பாக இருந்த பாசன பரப்பெல்லாம் குறைந்து நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்ததன் காரணமாகத்தான் பாதிப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து பிரச்சனைகளை செய்து கொண்டு வருகிறது இதற்கு நிர ந்தர தீர்வு காண ஜெயலலிதா தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி 142 அடியை உடனடியாக தேக்கி கொள்ளலாம் பேபி அணையை சீரமைத்ததற்கு பிறகு 152 அடியை தேக்கிக் கொள்ளலாம் என்கிற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நம்முடைய வாழ்வாதாரத்தை ஜீவாதாரத்தை காப்பாற்றுகிற இந்த உரிமையை பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அந்த அரசு அதை காப்பாற்ற தவறிவிட்டது. எப்போதெல்லாம் முயற்சி எடுக்கிறோமோ அப்போது எல்லாம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிற திமுக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கிறதோ உடந்தையாக இருக்கிறதோ என்கிற ஐயம்கூட நமக்கு ஏற்படும் போதுதான் இதுபோன்ற உரத்த குரலிலே பிரச்சனைகளை கேரளா அரசு எழுப்புவதை நாம் வாடிக்கையாக பார்க்கிறோம் ஒவ்வொரு முறையிலும் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது 142 அடியில் இருந்து 152 அடி உயர்த்துவதற்கு குறிப்பாக இந்த தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை இந்த கேரளா அரசு உருவாக்கி வருகிறது தற்போது 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டிய தீருவோம் என்று ஜனவரி மாதமே கேரளா அரசு செய்திருப்பது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய இந்த திமுக அரசு மௌனம் காப்பது என்பது நம்முடைய ஜீவாதார உரிமை காவு கொடுக்கின்ற சூழலை பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment

Post Top Ad